முகிழ் நிலா கவிதைகள்

ப்ப்..பே…வென
அவளெழுப்பும்
பேரொலிக்கு
முகம்சுழித்து
அழுதுவிடும்
பொழுதெல்லாம்
பன்னீர்பூ காடொன்றை
பரிசளித்து
நகர்கிறாள்
மகளொருத்தி….

Read More »

Advertisements

ராசபார்ட்டின் சோககீதம்

அரிதாரம்பூசி அரங்கம் ஏறினால்
ஆரவாரங் கொள்ளும் கூடிய கூட்டம்
பட்டுக்கரை வேட்டியும்
பட்டைத்திருநீறும் பார்த்தால்
கைகுவித்து வணங்கும் பதினெட்டுப் பட்டியும்
தோள்பட்டை வரை தொங்கும் சிகைகண்டால்
கன்னியர் மனதிலும் புகையும் பொறாமை
வேடனாய் விருத்தனாய்
வள்ளியோடு தோன்றினால்
பரவசமாகும் பக்திப் பழங்கள் யாவும்
கட்டபொம்மனாகி கழுத்து நரம்பு புடைக்க
வெள்ளைத் துரைக் கெதிராய் வீரவசனம் பேசினால்
சட்டென எழுந்து கொள்ளும்
சாகக்கிடக்கும் கிழங்கட்டையும்
இங்ஙனம் சென்ற திசையெல்லாம்
செயக்கொடி நாட்டிய
‘ராசபார்ட்’ ரங்கசாமி
யாருமற்ற பொட்டலில் இசைக்கிறார்
தன் கந்தர்வ கானத்தை
செந்நிற விழிகளில் கண்ணீர் மல்க
ஆடலரசிகளும் அபிநய சரஸ்வதிகளும்
அலங்கரித்த திருவிழா மேடைகளை
மதன மோகினிகளும் மந்தகாசக் காமினிகளும்
கபளீகரம் செய்துவிட்ட கடுஞ்சோகத்தில்.

ஸ்ரீதர் பாரதி
2018 பிப்ரவரி சஞ்சிகையில் வெளியான கவிதை