மீண்டெழும் ஸ்டெர்லைட் போராட்டம்

தமிழகத்தின் மிக நீண்ட நெடிய போராட்டங்களில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏறத்தாழ 25  ஆண்டுகளாகத் தொடரும் இப்போராட்டம் தற்போது ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தினை எதிர்த்து மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. கடந்த பிப்ரவரி 13 அன்று நடந்த மக்கள் போராட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் உட்பட பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். 250க்கும் மேற்பட்ட மக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதும் செய்யப்பட்டனர். ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் வரலாறை சற்று சுருக்கமாக பார்ப்போம்.

Read More »

Advertisements

சாகர்மாலா திட்டம்

ஓக்கி புயலின் துயரம் இன்னும் நம்மை வாட்டிக் கொண்டிருக்கிறது. ஒரு மாதம் கடந்த பின்பும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் நிலை என்னவானது என்று தெரியவில்லை. சமீப காலங்களில் தொடர்ச்சியாக மீனவ, விவசாய மற்றும் பழங்குடியினரின் வாழ்வாதாரங்கள் மீது தொடர்ச்சியாக வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் தாக்குதல் நடத்தி வருகிறது அரசு. தொன்று தொட்டு இன்று வரை தங்களது வாழ்வாதாரத்திற்காக இயற்கை வளங்களை நேரடியாக சார்ந்து வாழும் பழங்குடி இன மக்களையும், மீனவ மக்களையும் அவர்கள் வாழ்விடங்களில் இருந்து அகற்ற பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகிறது அரசு.

Read More »

டெல்லி மாசு: நெருக்கடியான சிக்கல்களைத் தீர்க்க கடினமான முடிவுகளே தேவை

டில்லியில் இந்தக் குளிர்காலத்தில் மூச்சு விடுவதில் அவ்வளவாக சிக்கல் இல்லை. புகை மூட்டம் மிக அதிகமாக இருக்கும் காலகட்டத்தில் நான் இப்படி சொல்வது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் நான் சொல்ல வருவது, சென்ற வருடத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் இந்த வருடத்திற்கான காற்று மாசு குறைவுதான். கடந்த குளிர்காலாத்தில் நவம்பர் மாதத்தில் 53 சதவீத நாட்களும் டிசம்பர் மாதத்தில் 32 சதவீத நாட்களும் ஜனவரி மாதத்தில் 45 சதவீத நாட்களும் மிக அபாயகரமான, நச்சுத் தன்மையுடன் காற்று மாசு இருந்தது. நாம் கடினமான முடிவுகளைச் செயல்படுத்தி, நடைமுறைக்கு கொண்டு வராதவரை இந்த மோசமான நிலை இன்னும் நீடிக்கும்; அதிகரிக்கவும் செய்யும்.

Read More »